பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஸ்னேகாவுக்கு அவரது கணவரும், நடிகருமான பிரசன்னா அன்புப் பரிசு தந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக பல வருட காலம் இருந்தவர் நடிகை ஸ்னேகா. கமல், விஜய், அஜித், பிரசன்னா உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம். கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
புகழின்உச்சத்தில் இருந்தபோதே இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகும் இவர் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் இந்த வருடம் பட்டாஸ்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நடிகை ஸ்னேகா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகரும் ஸ்னேகாவின் கணவருமான பிரசன்னா வீட்டை அலங்கரித்து, பிரமாதமான கேக்கையும் அன்புப் பரிசாக தயார் செய்து, மனைவி ஸ்னேகாவுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளார்.
குழந்தைகள், கணவருடன் நடிகை ஸ்னேகா தனது பிறந்தநாளைக் கொண்டாடிய படங்கள் தற்போது இணையத்தில் வலம் வருகின்றன.