முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. சீட் வழங்காது என கர்நாடக மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
கர்நாடகா:
கர்நாடகாவில் பா.ஜ.க. முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்து உள்ளது அவரது அமைச்சரவையில் கே.எஸ். ஈஸ்வரப்பா அமைச்சராக இருந்து வருகிறார்.அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ஈஸ்வரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
இந்துக்களில் உள்ள எந்தவொரு சமூகத்தை சார்ந்தவருக்கும் தேர்தலில் போட்டியிட நாங்கள் தொகுதி வழங்குவோம்.அவர்கள் லிங்காயத் பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும்சரி , குருபர், ஒக்கலிகர் பிரிவினராக அல்லது பிராமணராக இருந்தாலும் சரி எங்களுடைய பா.ஜ.க கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்குவோம். ஆனால் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என கூறினார்.
அவர் அளித்த இந்த பேட்டியினால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.