தமிழகத்தில் கூடுதல் ரயில்களை இயக்க, தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து குறிப்பிட்ட பாதைகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்திலும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
https://twitter.com/GMSRailway/status/1333745010949255175?s=19
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் – மன்னார்குடி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூரு, பாலக்காடு இடையே டிசம்பர் 8ம் தேதி முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




