சீனாவுக்கு எதிராக ஒத்த கருத்துக்களை கொண்ட நாடுகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் கொரோனா பரவல் தொற்றுக்கு மத்தியில் நவம்பர் மாதம் 3 ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் 2 வது முறையாக டிரம்ப் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். டிரம்ப் இன்றுவரை தான் தோல்வியடைந்ததை ஏற்கமறுத்து வரும் நிலையில் வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜோ பைடன் பதவி ஏற்க உள்ள நிலையில் அதிபருக்கான அதிகாரத்துடன் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களையும், பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்துவருகிறார். தற்போது சீனா நாட்டிற்கு எதிரான ஒரு கருத்தையும் வெளியிட்டார்.அதில், சீனாவுக்கு எதிராக ஒத்த கருத்துக்களை கொண்ட நாடுகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
Read more – இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் : தமிழருவி மணியன்
மேலும், வர்த்தக ஆதிக்கம் மட்டுமின்றி தொழில்நுட்பம், மனித உரிமைகள் போன்ற முக்கிய துறைகளில் சீனாவை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.