2020 ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை :
தமிழ், தெலுங்க, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது.
தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருது டூ லெட் படத்திற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது ஆர்.பார்த்திபனிற்கு கிடைத்துள்ளது. அதன் மொத்த பட்டியல் பின்வருமாறு:
சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை – ஜோதிகா (ராட்சசி)
சிறந்த திரைப்படம் – டூ லெட்
சிறந்த இயக்குனர் – ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு)
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்
பன்முகத்தன்மை கொண்ட நடிகர் -அஜித்குமார்
மேலும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுக்கு பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விருதும், சிறந்த படமாக உயரே திரைப்படமும் தேர்வாகியுள்ளது. தெலுங்கில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விருதுக்கு நாகர்ஜூனாவும், சிறந்த திரைப்படமாக நடிகர் நானி நடித்த ஜெர்சி திரைப்படமும் தேர்வாகியுள்ளது.