டிரம்பின் பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சீனா:
உலகில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் முன்னணியில் உள்ளது. சீனா உடனான உறவில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். அதிபர் டிரம்ப் 4 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்கா சீனா இடையே வர்த்தகம், மனித உரிமை மீறல் போன்ற காரணங்களாக பனிப்போர் நடந்து வருகிறது.
Read more – தி.மு.க.விற்கு எடுத்து தான் பழக்கம், என்றும் கொடுத்து பழக்கம் இல்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் ஜனவரி 20 ம் தேதி பதவி ஏற்கிறார். இந்த நிலையில், டிரம்பின் பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாவது:
சமீப ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனா உறவுகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஜோ பைடனின் புதிய நிர்வாகத்தால் அமெரிக்காவில் விவேகமான அணுகுமுறைக்கு திரும்பி சீனாவுக்கு இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.அமெரிக்கா மற்றும் சீனா உறவுகளுக்கு இயல்பு நிலையை மீட்டெடுத்து ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.