இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பல கவலைகளில் முக்கிய கவலையாக இருப்பது முடி உதிர்வது. முடி உதிர்வது என்ன அவ்வளவு பெரிய கவலையா என்றால் ஆம் என்றே முடி உதிர்ந்த அனைவரும் கூறுவர். இப்போது உங்களுக்கு இந்த கேள்வி தோன்றலாம். தலை முடிக்கும் மன அழுத்தத்துக்கும் என்ன பாஸ் சம்மந்தம்? சம்மந்தம் இருக்கிறது.

முடி உதிர்வதற்கு பரம்பரை காரணங்கள், உணவுப்பழக்கங்கள், சுற்றுச்சூழல் என பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம். எனவே, முடி உதிர்வை தடுக்க வேண்டும் என்றால் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். உடலில் பிரச்சனை வந்தால் தெரிந்து விடும். உதாரணமாக தலைவலி, வயிற்று வலி, காய்ச்சல் என ஏதாவது இருந்தால் நமக்கு தெரிந்து விடும். ஆனால், மன அழுத்தம் உள்ளதை எப்படி கண்டுபிடிப்பது.

தூக்கமின்மை, பசியின்மை போன்ற பிரச்சனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இரண்டு வாரத்திற்கு மேலாக இந்த பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். திடீரென மாறும் உணர்ச்சிகள், பிடித்த வேலைகளில் கூட ஈடுபாடு இல்லாமல் போவது, அதீத கோபம் போன்றவை மன அழுத்தம் நமக்கு ஏற்பட்டு இருப்பதற்க்கான முக்கிய அறிகுறிகள்.

பெரியவர்களுக்கு தான் இப்படி என்றால் குழந்தைகள் நிலை இன்னும் மோசம். மதிப்பெண், தேர்ச்சி விகிதம், முழு தேர்ச்சி என பெறுறோர்களும், பள்ளிகளும் குழந்தையை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள்.
மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம், வீடு – அலுவலகம், அலுவலகம் – வீடு என இயந்திர தனமாக இருப்பது தான். அதுக்காக வேலையவா விட முடியும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேலையை விட வேண்டாம் ஆனால், ஒரு ப்ரேக் எடுத்துக் கொள்ளலாம். ஒரு ப்ரேக் எடுத்து நமக்கு பிடித்த இடத்திற்கு சுற்றுலா சென்று வரலாம்.

தினமும் காலையில் ஒரு இருபது நிமிடத்தை நமக்காக ஒதுக்கி தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவை செய்யலாம். தியானம் நம் உடலில் உள்ள கவலைகள் அனைத்தையும் போக்கச் செய்யும். மன அழுத்தத்தை குறைத்து முடி உதிர்வையும் தடுத்து இளைஞர்கள் தங்களின் கவலையை போக்கிக் கொள்ளலாம்.




