விஜய்சேதுபதியின் ஹிட் படத்தில் தற்போது சந்தானம் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2013வது வருடம் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’.
சுமார் மூஞ்சி குமார் கதாப்பாத்திரத்தில் விஜய்சேதுபதியின் கதாப்பாத்திரமும் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாகா ‘கொரோனா குமார்’ திரைப்படம் இயக்க இருப்பதாக லாக்டவுண் சமயத்தில் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார் கோகுல்.
READ MORE- உலக அளவில் சாதனை படைத்த ‘மாஸ்டர்’ வசூல்! #MasterGloballyNo1
இதனையடுத்து படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் எனவும் கொரோனா குமாராக சந்தானம் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

‘டிக்கிலோனா’, ‘பாரிஸ் ஜெயரஜ்’ உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ள சந்தானம் அடுத்து இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிப்ரவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.




