தேனியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டில் காளைக்களை அடக்குவது போல் பன்றிகளை அடக்கும் போட்டி விறுவிறுப்பாக நடந்தது.
தேனி:
தேனி குறமகள் வள்ளிநகர் குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் (18.01.2021) பன்றி தழுவும் விழாவை வனவேங்கைக் கட்சியினர் நடத்தி அசத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தி வரும் நிலையில் தேனியில் பன்றி தழுவும் போட்டி நடந்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வனவேங்கைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் உலகநாதன் கூறுகையில்: விவசாயத்தில் உழவுக்காக காளை மாடுகள் பயன்படுவது போல, சங்ககாலத்தில் குறிஞ்சி நிலத்தில் உழவிற்குப் பன்றிகள் பயன்படுத்தப்பட்டது. இதுகுறித்து புறநானூற்றில் பாடான் திணையில் உள்ளது என்று தெரிவித்தார்.
Read more – மூத்த பெண்ணை காதலித்த இளைஞன் : காதலை ஏற்கமறுத்ததால் வெறிச்செயல்
மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை போலவே இதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிகளும் உள்ளது. சுமார் 70 முதல் 100 கிலோ எடை கொண்ட பன்றிகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ளும். மூன்று பேர் அந்த கட்டத்தில் நின்றுகொண்டு அதில் ஒருவர் பன்றியின் பின்னங்காலை பிடித்து நிறுத்தவேண்டும். இதுவே சவாலான போட்டியாகும். இந்த பன்றி தழுவும் போட்டிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து பன்றிகள் களமிறக்கப்பட்டு வெற்றிபெற்ற பன்றிகளுக்கும், வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.