இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய நாடாளுமன்றம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி :
Head Consultant, Social Media Marketing (Senior Consultant) , Social Media Marketing (Junior Consultant) , Graphic Designer, Senior Content Writer (Hindi) Junior Content Writer (Hindi) & Social Media Marketing (Junior Associate)
மொத்த காலிப் பணியிடங்கள் : 09
கல்வித் தகுதி :
10 மற்றும் 12ம் தேர்ச்சி பெற்றவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 22 முதல் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://loksabhadocs.nic.in/ என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பின்னர் ஸ்கேன் செய்து consultants2021-1ss@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.02.2021 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://loksabhadocs.nic.in/
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.