மனைவியின் உறவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கொடூர கணவன் விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம் அடுத்த சானிடோரியம் இதில் 40 வருடங்களாக தோல் வியாபாரம் செய்யும் இரண்டாவது மகன் தான் சபீக் அகமது மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்து விவாகரத்து ஆன நிலையில் மூன்றாவதாக ஆஸ்திரேலியா குடியுரிமை வாங்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை அடுத்து சபீக்கிற்கு மனைவியுடனான அந்தரங்க உறவை வீடியோ எடுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது இதனிடையே லாக்டவுனில் வீட்டில் இருந்தபோது கர்ப்பமாக இருந்த தனது மூன்றாவது மனைவியின் கர்ப்பத்தை கலைத்து உள்ளார். இதனால் அந்தப் பெண் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தாய் வீட்டிற்கு சென்ற தன் மனைவியை தன்னுடன் வந்துவிடுமாறு மிரட்டி உள்ளார் சபீக் அகமது தன்னுடன் வாழ மறுத்ததால் தன்னிடம் உள்ள தங்களது அந்தரங்க வீடியோகளை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதோடு மட்டுமின்றி வாட்ஸ்அப் ஸ்டேட்ட ஸில் அந்த வீடியோவை வைத்து மனைவியை மிரட்டி உள்ளார் இதனால் பயந்த அவரது மனைவி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவருடைய செல்போனை கைப்பற்றி ஆராய்ந்த போது செல்போனில் முதல் மற்றும் இரண்டாவது மனைவியையும் வீடியோக்களும் இருந்து உள்ளது
சென்னை சைபர் கிரைம் மூலமாக இவருடைய செல்போனை ஆய்வு செய்யும்போது 100க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள் புகைப்படங்கள் சிக்கின தொடர் விசாரணையில் இவருக்கு இது ஒரு பழக்கமாகவே இருக்கிறது. இவர் முதலில் கான்பூரை சேர்ந்த பெண்ணை shaadi.com மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார
அந்தப் பெண் பிரிந்து செல்லும் பொழுது இதேபோல் மிரட்டி உள்ளார் அவரும் கான்பூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இரண்டாவதாக பெங்களூரை சேர்ந்த பெண்ணை அவரது முறைப்படி கல்யாணம் செய்து அவரிடம் இதே வேலையை காட்டி உள்ளார். அவரும் பிரிந்து செல்லும் போது பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இறுதியில் தற்போது சென்னை போலீசில் சிக்கியுள்ளார் இவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர் மேலும் இதுபோன்ற ஒரு செயலை செய்தால் பெண்கள் தடுக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்