சாப்பிடும் போதும் மாஸ்க் போடணும் விமானப் பணிப்பெண்ணின் செயலால் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஸ்பீரில் ஏர்லைன்ஸ் விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது கணவருடனும் இரண்டு வயது குழந்தையுடனும் இருக்கையில் அமர்ந்தவாறு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த விமானப் பணிப்பெண் நீங்கள் முகக்கவசம் அணியும் விதியை மீறிவிட்டீர்கள் உடனே உங்களை உடைமை மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு விமானத்தில் இருந்து இறங்குங்கள் என கடுமையாக கூறியுள்ளனர்.
இதனை அறியாமல் அந்த பெண் அதன் பின்பு குழந்தை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது. சாப்பிட்டவுடன் முகக்கவசத்தை அணிந்து விடுகிறேன் என கூறியுள்ளார். ஆனாலும், அதை ஏற்க மறுத்த விமானப் பணிப்பெண் மீண்டும் உடனே விமானத்தை விட்டு இறங்குங்கள். இல்லையெனில் போலீசாரை அழைக்க வேண்டி இருக்கும் என எச்சரித்துள்ளார். இருப்பினும், நான் ஒரு கர்ப்பிணி என்னால் இறங்க முடியாது எனப் பிடிவாதமாக அவர் மறுத்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து வீடியோவை பதிவிட்டிருந்த யூத பொது விவகார கவுன்சிலை சேர்ந்த yossi என்பவர். அந்த பெண் 7 மாத கர்ப்பிணி ஆவர். அதோடு தனது 2 வயதுக் குழந்தையையும் அவருடன் வைத்திருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தினர் விமானத்தை விட்டு கீழே இறங்கிவிட்டார்கள் எனப் பதிவிட்டிருந்தார். இதற்க்கு நெட்டிசன்கள் பலரும் மனித நேயம் அற்ற செயல் மீது என அந்த விமானத்தின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.




