மம்மூட்டி… இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். மலையாள சினிமாவின் மதிப்புமிக்க சொத்து. இந்தியாவின் மற்ற சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் மற்ற மொழிகளில் நிறைய படங்களில் நடித்திருக்க மாட்டார்கள். ஆனால் இதில் மம்மூட்டி வித்தியாசமானவர்.
அழகன், தளபதி, ஆனந்தம், மெளனம் சம்மதம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பேரன்பு போன்ற திரைப்படங்கள் அவருக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்களை பெற்றுத் தந்தது. தளபதி படத்தில் மம்மூட்டி நடித்த தேவா கதாபாத்திரம் பல தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட். சில வாரங்களுக்கு முன்பு தான் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி திரைப்படத் துறையில் நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்தார்.
இவர் வெற்றிகளை மட்டும் சந்தித்தவர் இல்லை. தோல்விகளை கண்டவர் அதிலிருந்து மீண்டும் வந்தவர். இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
செப்டம்பர் 7 இன்று, அவருக்கு 70 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இன்றும் 20 வயது இளைஞர் போன்று அதே இளமையுடன், அதே துடிப்புடன் ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார். திரைத்துறையினரும்,ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மம்மூட்டியின் பிறந்தநாளிற்கு அவரது மகன் துல்கர் சல்மானின் பதிவு வைரலாகியுள்ளது. அதில், “நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன் உங்களுடன் ஒருவர் ஒரே ஃப்ரேமில் நிற்கும்பொழுது அங்கு தான் இருப்பதை நியாயப்படுத்த முயற்சி செய்ய முடியுமா.. நான் எப்போதும் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் நான் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா நீங்கள் வழக்கம்போல உங்களது வயதினை தலைகீழாக கணக்கு எழுத துவங்குங்கள் என்று குறிப்பிட்டு அதன் புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.