பொன்னியின் செல்வன் விரைவில் வெளியாகவிருக்கும் இந்திய வரலாறு குறித்த ஒரு புனைவு திரைப்படமாகும். இது இயக்குனர் மணி ரத்னத்தின் கனவு திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது. மணிரத்னம் இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயராம் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், விக்ரம் பிரபு மற்றும் அஸ்வின் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் இத்திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளையும் முடித்துள்ளனர்.
ரஹ்மான் இசை அமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படத்தின் முதல் பாகம் முழுவதும் படக்குழுவினரால் முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 28, 2022ல் முதல் பாகமும் இரண்டாம் பாகம் 2020 இரண்டாம் ஆண்டின் இறுதியிலும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும் பொருட்செலவு ஆவதால் இத்திரைப்படம் இரு பாகங்களாக உருவாகவுள்ளது.




