சென்னையில் 5 உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக டி.ஜி.பி. திரிபாதி இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
எண்ணூர் சரக உதவி ஆணையர் உக்கிரபாண்டியன், தாம்பரம் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை டி.எஸ்.பி. பிரகாஷ்குமார், புளியந்தோப்பு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கனகரான், அம்பத்தூர் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கோட்டூர்புரம் சரக உதவி ஆணையர் சுதர்சன், பூவிருந்தவல்லி சரக உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். பூவிருந்தவல்லி சரக உதவி ஆணையர் செம்பேடு பாபு, கோட்டூர்புரம் சரக உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.