தமிழ் திரையுலகில் தனக்கு என ஒரு அடையாளத்தை வைத்து இருப்பவர் தல அஜித் சிறந்த நடிகர் என்பதை விட சிறந்த மனிதர் என அனைவராலும் போற்றப்படுபவர் அஜீத் அவரின் சிறந்த பண்புகளை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மிரட்டும் வில்லனாக நடித்த ஒருவர்தான் “வித்யூத் ஜம்வால்” இவர் தமிழில் தல அஜித் குமார் உடன் பில்லா-2, விஜய்யுடன் துப்பாக்கி, நடிகர் சூர்யாவுடன் அஞ்சான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அஞ்சான் திரைப்படத்தில் பாசிட்டிவ் கேரெக்டரில் நடித்து இருந்தாலும் பில்லா, துப்பாக்கி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக வந்து மக்களிடம் பாராட்டு பெற்றவர்.
இந்நிலையில் இவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழ் திரைப்படங்களில் அவர் பணியாற்றியதை குறித்து பேசியுள்ளார்.
“நாம் அனைவருக்கும் தெரிந்த பிறகு கொஞ்சம் பேமஸ் ஆன பிறகு அனைவரும் நம்மை மதித்து நடப்பார்கள். அதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் நான் தமிழ் திரைப்படங்களில் நடித்த பொழுது என்னை யாருக்குமே தெரியாது.
எனினும் என்னை மரியாதையாக நடத்தினார்கள். குறிப்பாக ‘தல’ என்று கூறினார். பாலிவுட் திரையுலகம் மேல் பல பேர் குறை கூறி வரும் நிலையில் ஒரு பாலிவுட் பிரபலம் தமிழ் திரைப்பட நடிகரை பாராட்டி இருப்பது விமசகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.