மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 20.01.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் மாலை 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
எதிர்பாராத திடீர் தனவரவு வந்தடையும். வீட்டில் செலவு இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சிலருக்கு பிள்ளைகள் வழியில் அனுகூலம் பலன் கிடைக்கும். வியாபார ரீதியாக பயணங்களால் லாபம் இருக்கும்.
ரிஷபம் :
வீட்டில் உறவினர்கள் வகையில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடன் இருப்பவர்களால் அனுபவம் கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் நிலை இருக்கும். வருமானம் சிறப்பாக அமையும்.
மிதுனம் :
குடும்பத்தில் உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் சாதக பலன் இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கடன்கள் குறையும். வருமானம் உண்டாகும்.
கடகம் :
நீங்கள் செய்யும் காரியங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். வெளியூர் பயணம் செல்லக்கூடும்.
சிம்மம் :
எந்த செயலிலும் சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகளில் தடங்கள் உண்டாகும். வீட்டில் கருத்து வேறுபாடு இருக்கும்.பகல் 12.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் வேண்டும். மதியத்திற்குப் பின் குழப்பம் இருக்கும்.
கன்னி :
உங்களின் ராசிக்கு இன்று பகல் 12.36 மணி மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட இருக்கும்.நீங்கள் எதிலும் பிறரை நம்பி காரியத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். வெளியிடங்களில் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருக்க வேண்டும்.
துலாம் :
இன்று உங்களுக்கு வியக்கத்தக்க செய்திகள் வந்து கூடும். திருமணம் மற்றும் சுபகாரிய பேச்சுகளில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். உத்தியோகத்தில் அதிகம் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
விருச்சிகம் :
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் இருக்கும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதம் இல்லாமல் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் லாபத்தை கொடுக்கும்.
தனுசு :
உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும்.எடுத்த காரியம் நிறைவேற உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். நண்பர்களின் ஆதரவால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும்.
Read more – WII நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021
மகரம்:
எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடைகள் உண்டாகும்.வீட்டில் உள்ளவர்களுடன் தேவையில்லாமல் மனஸ்தாபம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது வேண்டும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம் :
வீட்டில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கும் யோகம் கிடைக்கும்.
மீனம் :
உறவினர்களால் வீண் பிரச்சினை இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் இருக்கும்.




