மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக்கிழமை தேதி 27.03.2021, நல்ல நேரம் :காலை 7.-30-8.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் மாலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
குடும்பத்தில் ;உறவினர்களால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வதால் அன்பு அதிகரிக்கும்.
ரிஷபம் :
குடும்பத்தில் தொடர்ந்து வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்கள் உதவியால் எதையும் எளிதாக வெற்றி கொள்வீர்கள். பணிபுரியும் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
மிதுனம் :
வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெற கடுமையாக உழைப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வாகன பயணம் அதிகமாக ஏற்படும்.
கடகம் :
குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். தொழில் முறை சார்ந்தவர்களிடம் அணுகுமுறை கொள்வது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர்.
சிம்மம் :
குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் அமையும் நாளாக இருக்கும். நண்பர்களின் மூலம் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்விக சொத்துக்களை கவனமுடன் கையாள்வது நல்லது.
கன்னி :
குடும்பத்தில் திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் சார்ந்து புதிய மனிதர்கள் அறிமுகம் கிடைக்கும்.
துலாம் :
எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு சந்தித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.
விருச்சிகம் :
தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். குடும்பத்தில் சுபசெய்திகள் காதில் வந்தடைந்து மகிழ்ச்சியை தரும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும்.
தனுசு:
வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்களின் நம்பிக்கை நல்ல ஆரோக்கியத்தை தரும். உங்கள் செயல் திறன் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
மகரம்:
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. விருப்பமானவற்றை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுப நிகழ்ச்சிகள் தானாக வந்து கைகூடும். செலவுகள் அதிகமாக காணப்படும்.
கும்பம்:
எந்த செயலிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு குறைந்து செலவுகள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வோடு பழகுவீர்கள்.
மீனம் :
புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் நாளாக அமையும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமாக இருக்கும்.




