இத்தாலிய மோட்டார்சைக்கிள் ப்ராண்டான டுகாட்டி பனிகளே வி2 பைக்கின் பிஎஸ்6 வெர்சனின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது.

டுகாட்டி நிறுவனத்தின் தனித்துவமான பைக் மாடலாக பனிகளே வி2 விளங்குகிறது. இதன் பிஎஸ்6 வெர்சனுக்கான முன்பதிவுகள் சென்னை, பெங்களூர், கொச்சி, ஹைதாராபாத், மும்பை, புனே, கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த முன்பதிவிற்கான முன்தொகை ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “ஐக்மா கண்காட்சியில்” காட்சிப்படுத்தப்பட்டதில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக பனிகளே வி2 விளங்குகிறது.

இந்த அல்டிமேட் சூப்பர்பைக்கை பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளோம்” என டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுல் சந்த்ரா கூறியுள்ளார். புதிய பனிகளே வி2 ஆனது தெளிவாக கட் லைன்களுடன் உருவாக்கப்பட்டுள்ள காம்பெக்ட் பைக்காகும்.

இந்த கட் லைன்கள், எந்த சமரசமும் இன்றி முழு ஆற்றல் உடன் பைக் இயங்குவதற்கு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். பனிகளே 959 மோட்டார்சைக்கிளுக்கு நேரடி மாற்று பைக் மாடலாக வெளிவரும் பனிகளே வி2 பெரும்பான்மையான டிசைன் பாகங்களை அதன் முன்னோடி பைக்கான பெரிய தோற்றம் கொண்ட பனிகளே வி4-ல் இருந்து பெற்றுள்ளது.