ஆப்பிள் சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தனது IPHONE 11 ஐ தயாரிப்பது உறுதியாகியுள்ளது இந்த தகவலை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் அறிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதிகமாக விற்கும் ஐபோன்களில் ஐபோன் 11 ( IPHONE 11)மாடலும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் ஐபோன் 11 மாடலை, இந்தியாவிலேயே உற்பத்தி செய்து இந்தியாவில் விற்க தொடங்கி இருக்கிறது ஆப்பிள்.
அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முயற்சியை மேலும் அதிகரிக்கும். அமெரிக்க-சீனா உறவுகளில் உள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தி எகனாமிக் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, உற்பத்தி ஒவ்வொருகட்டங்களாக அதிகரிக்க கூடும் ஆப்பிள் ஐபோன் 11(IPHONE 11) ஐ இந்தியா ஏற்றுமதி செய்யலாம். இது சீனாவை சார்ந்திருப்பதை குறைக்கவும் உதவும்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 இங்கேயும் விற்பனை செய்யப்படுவதால் இந்தியாவில் கைபேசிகளுக்கான விலைகள் குறைக்கப்படவில்லை. உள்ளூர் உற்பத்தி ஆப்பிளுக்கு 22 சதவீத இறக்குமதி வரியை மிச்சப்படுத்துவதால், விலைகள் பின்னர் குறைக்கப்படலாம் என்று தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவுக்கு அருகிலுள்ள விஸ்ட்ரான் ஆலையில் புதிய ஐபோன் எஸ்.இ.யையும் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முந்தைய ஐபோன் எஸ்.இ(IPHONE SE)இந்தியா ஏற்கனவே சென்னையில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) ஆலையில் ஐபோன் எக்ஸ்ஆர் (IPHONE XR)மற்றும் பெங்களூரில் அமைந்துள்ள விஸ்ட்ரான் (Wistron)தொழிற்சாலையில் ஐபோன் 7 (IPHONE -7)ஐ உருவாக்கியுள்ளது .
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைபேசிகளின் சப்ளை ஏற்கனவே கடைகளை அடைந்துள்ளது,இதற்கிடையில், ஆப்பிள் நாட்டில் உற்பத்தியை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதன் சப்ளையர் ஃபாக்ஸ்கான் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சென்னைக்கு அருகிலுள்ள ஆலையில் ஃபாக்ஸ்கான் திட்டமிட்ட முதலீடு மூன்று ஆண்டுகளில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஐபோன் உற்பத்தியின் ஒரு பகுதியை சீனாவிலிருந்து வெளியேற்ற ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து ஒரு வலுவான கோரிக்கை உள்ளது” என்று ராய்ட்டர்ஸுக்கு (Reuters) நிறுவனத்தின் ஆதாரம் தெரிவித்துள்ளது.