வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், தேனி, திண்டுக் கல், திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புளளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் கிராமப்புறங்களில் விவசாயப்பணிகளை மக்கள் விறுவிறுப்பாக மேற்கொள்ள தொடங்கிவிட்டனர்.