பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவரது படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கிறார்கள். இதனால் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி விட்டார். பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. ஆனால் காதலிப்பதை இருவருமே உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது. பிரபாஸ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இதில் சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கிருத்தி சனோன் அளித்த பேட்டியில், ”பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். கிருத்தி சனோன் வேறு ஒருவர் இதயத்தில் இருக்கிறார். அந்த மனிதர் தற்போது தீபிகாவுடன் படப்பிடிப்பில் இருக்கிறார்,” என இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார்.அதைத் தொடர்ந்து இருவரது காதலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவற்றை “பொய்யான செய்தி” என்று கிருத்தி சனோன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கிருத்தி சனோன் அது காதலும் இல்லை,பப்ளிசிட்டியும் இல்லை. அந்த ரியாலிட்டி ஷோவில் எங்களது (ஓநாய்) கொஞ்சம் காட்டுத்தனமாக நடந்து கொண்டார். ஒரு வேடிக்கையான கேலிப் பேச்சு இப்படி வதந்தி வரக் காரணமாகிவிட்டது. ஏதாவது ஒரு இணையதளம் எனது திருமணத் தேதியை அறிவிப்பதற்கு முன்பு உங்களது கற்பனையை உடைத்து விடுங்கள். வதந்திகள் அனைத்து நிச்சயம் ஆதாரம் இல்லாதவை,” என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அதனால் தற்போதைக்கு பிரபாஸ் – கிருத்தி சனோன் காதல் பற்றிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.