ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/08/Screenshot_20200803-1845212-1024x588.png?resize=1024%2C588&ssl=1)
மேற்கத்திய பாணியிலான நிகழ்ச்சி என்றாலும், இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது பிக்பாஸ். 100 பேரை ஒரு வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, அவர்களது தனிப்பட்ட குணங்களையும், எண்ணங்களையும் படம்பிடித்து ஊருக்கு காட்டும் நிகழ்ச்சிக்கு எனோ தெரியவில்லை இத்தனை ரசிகர்கள் கூட்டம். இந்த நிகழ்ச்சி மூலம் ஒருசிலருக்கு திரையுலகில் நல்ல வாய்ப்புகள் அமைந்தாலும், ஒரு சிலருக்கு சமூகத்தில் அவர்கள் மிதான எண்ணம் எதிர்மறையாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக, ஒரு சிலருக்கு தனிப்பட்ட வாழ்க்கையும் கூட நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/08/images-23.jpeg?resize=660%2C440&ssl=1)
இந்த நிகழ்ச்சியை தமிழில் கடந்த 3 சீசன்களையும் கமலஹாசன் தொகுத்து வழங்க, அவற்றை தமிழக மக்கள் சீரியலை காட்டிலும், அதிகமாக நேசித்து தனியார் தொலைக்காட்சியின் டிஆர்பியை ஏக போகமாக எகிற செய்தனர். இதனிடையே தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை வரவேற்பு குறையாமல் நிறைவு செய்துள்ளது. கடந்த சீசனில் முன்னனி நடிகரான நாகார்ஜுனா அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்ற இந்நிகழ்ச்சி, நடப்பாண்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தாமதமாகியுள்ளது. தமிழகத்தில் படபிடிப்பிற்கான தளர்கள் வழங்கப்படாததால் அதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ் சீசன் 4-க்கான’ செட் போல தோற்றமளிக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், உடைகள் ரியாலிட்டி ஷோவின் செட்களிலிருந்து எடுக்கப்பட்டது போலவே தோன்றுகிறது.
இரண்டு புகைப்படங்களுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், , “மீண்டும் தொடங்கியது லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்.. என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/08/IMG_20200803_181158.jpg?resize=1024%2C678&ssl=1)
மேலும், அவை பிக்பாஸ் சீசன் 4-க்கான விளம்பரங்களுக்காக நடத்தப்படும் ஷுட்டிங் ஸ்பாட் புகைபடங்கள் என கூறப்படுகிறது. இதன் மூலம், போட்டியாளர்களும் பட்டியலிடப்பட்டு, நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் இந்த முறை பங்கேற்க உள்ள நட்சத்திரங்கள் யார் யார் என்பதை அறியவே பலரும் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் சீசன் 4 எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது