சிம்பு படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணி புரிந்துள்ளது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்துள்ளார். அடுத்த வருடம் சம்மர் ரிலீஸை குறி வைத்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நெல்சனும் அடுத்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். ‘கோலமாவு கோகிலா’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். அதற்கு முன்பு சிம்புவின் நடிப்பில் உருவான ‘வேட்டைமன்னன்’ படம் வெளியிட முடியாமல் போனது.

இதை இயக்கியவர் நெல்சன் திலீப்குமார்தான். இந்த படத்தில்தான் அசிஸ்டெண்ட் இயக்குநராக சிவகார்த்திகேயன் பணிபுரிந்துள்ளார்.
READ MORE- சிம்பு கதையில் விஜய்?
இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகரை விட இயக்குநராகவே தனக்கு ஆரம்பத்தில் ஆசை இருந்ததையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.




