கிறிஸ்துமஸை முன்னிட்டு ‘கோப்ரா’ படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் விக்ரம் அடுத்து நடித்திருக்கும் படம் ‘கோப்ரா’.
படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் என சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து ‘தும்பி துள்ளல்’ பாடல் வெளியாகி ட்ரெண்டானது. படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான்.
மேலும் படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவான விக்ரமுடைய ஸ்டில் வெளியாகியுள்ளது. ரெட்ரோ லுக்கில் விக்ரம் இருப்பது போன்றுள்ள இந்த படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு படப்பிடிப்பு துவங்கி இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் தற்போது கிறிஸ்துமஸை முன்னிட்டு இதன் இரண்டாவது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்ரம், துருவ் விக்ரமுடன் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




