திருமணத்திற்கு பிறகு தனது அடுத்த கரியரில் தனது அடுத்த கட்ட திட்டம் குறித்து பகிர்ந்துள்ளார் காஜல்.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் நடிகை காஜலுக்கும் கிட்சுலுவுக்கும் திருமணம் நடந்தது.
மெஹந்தி, நலங்கு, திருமணம், பார்ட்டி என இவரது திருமண கொண்டாட்டங்களும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. மேலும் ரசிகர்களும் காஜலுக்கு தங்களுடைய வாழ்த்துகளை பகிர்ந்திருந்தனர்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹனிமூனுக்காக காஜல் தனது கணவருடன் மாலத்தீவுகளுக்கு சென்றிருந்தார். அங்கிருந்தும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
தற்போது ‘புதிய தொடக்கம்’ என்கிற கேப்ஷனோடு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் காஜல். ஏற்கனவே, காஜல் ஜூவல்லரி பிசினஸ்ஸை மும்பையில் நடத்தி வருகிறார்.
தற்போது அவர் கணவருடன் இணைந்து இண்டீரியர் பிசினஸ்ஸை கவனித்து கொள்கிறாரா அல்லது அவரது பிசினஸ்ஸின் பிராண்ட் அம்பாசிடராக மாற போகிறாரா அதற்கான வீடியோவா இது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னொரு பக்கம் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன் என்பதையும் தெரிவித்துள்ளார்.




