பிரபுதேவா குழுவில் டான்ஸராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு படிப்படியாக டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என்று அடுத்தடுத்து புது அவதாரங்கள் எடுத்தவர் ராகவா லாரன்ஸ்.இப்போது பாலிவுட் வரை இவர் கொடிகட்டி பறந்து வருகிறார்.
ஆரம்பத்தில் குழு நடனத்தில் ஒரு ஓரத்தில் ஆடி கொண்டு இருந்த லாரன்ஸ் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, உள்ளிட்டோர் நடித்த அமர்க்களம் படத்தில் வந்த மகா கணபதி பாடல் மூலம் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய பெயரும், புகழும் கிடைத்தது.
இந்நிலையில் லாரன்ஸ் மகா கணபதி பாடல் பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், “மகா கணபதி பாடல் மூலம் தான் என் கெரியர் துவங்கியது. சினிமாவில் சாதாரணமாக டான்ஸ் மாஸ்டராக இருந்த எனக்கு இந்த வாய்ப்பு அளித்த சரண் சார் மற்றும் அஜித் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மாக கணபதி பாட்டுக்கு பிறகு சரண் தன் அடுத்த படமான பார்த்தேன் ரசித்தேன் படத்தில் ஒரு நெகடிவ் ரோல் கொடுத்தார். இந்த படத்திலும் லாரன்ஸ் நடிப்பால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் அதன் பிறகு அற்புதம் திரைப்படம் மூலம் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக அறிமுகமானார். ‘முனி’ ராகவா லாரன்ஸுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு அவர் முனி படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களையும் இயக்கி நடித்தார்.
அமர்க்களம் படத்தால் தன் கெரியர் ஆரம்பமானதாக தெரிவித்த ராகவா லாரன்ஸ், தான் டான்ஸ் மாஸ்டர் ஆகக் காரணமாக இருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த உதவிகளையும் மறக்கவில்லை. என்றும் கூறியுள்ளார்.