தமிழ் படத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருப்பவர் தல அஜீத் இவர் அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் இளம் இயக்குனர் எச். வினோத் சென்ற வருடம் வந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது இந்த வெற்றிக்கு பிறகு அஜீத் மீண்டும் அதே கூட்டணியில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் காவல் துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார் ஏற்கனவே 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது கொரோனா ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்பு தள்ளி போய் உள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹும்மா குரேஷி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம். நவம்பரில் துவங்கும் படப்பிடிப்பு மார்ச் மாதம் வரை நடக்க வாய்ப்புள்ளதாம்.
மேலும் தல அஜித்தின் வலிமை படத்தை 2021 கோடை விருந்தாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அஜீத் படத்தின் அடுத்த அப்டேட் இப்போது கிடைத்துள்ளது விஜய்யை வைத்து ‘போக்கிரி’யை இயக்கிய பிரபுதேவா, தனது சாதனையை விஜய்யோடு முடித்துக் கொள்ளாமல் அஜீத்தையும் டச் பண்ணுகிற ஆர்வத்தில் இருக்கிறாராம் . அது தொடர்பான சந்திப்புகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்திருக்கிறதாம்.
அப்போது என்றால் தல, பிரபுதேவா கூட்டணி அமையப்போவது உறுதி என கோலிவுட் வட்டாரங்கள் கிசுக்கிசுத்து வருகிறது.