அஜித்தின் 28 ஆண்டுகளாக திரையுலக பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய பிக்பாஸ் வனிதா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு ரசிகர்களுக்கு கிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகளும், பிக்பாஸ் பிரபலமான வனிதா கடந்த சில வருடங்களாகவே பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுவருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை வனிதா 3 வது முறையாக திருமணம் செய்து கொண்டதற்கு கடும் கண்டனங்கள் எழும்பிவந்தன. அதோடு இதுக்குறித்து நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை குட்டி பத்மினி மற்றும் பெண்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனையடுத்து தாம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாகவும், தேவையின்றி வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான், தற்போது அஜித் 28 ஆண்டு கால திரையுலக பயணத்தினை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக, கமாண் டிபி வைத்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இதற்கிடையில் பிக்பாஸ் வனிதாவும் நடிகர் அஜித் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் அஜித்தின் வளர்ச்சி நம்ப முடியாதது ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில்தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் சிறந்ததையும் மோசமானதையும் பார்த்தோம்.
அஜித் அவர்கள் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர். நான் சந்தித்த மிக உண்மையான, எளிமையான, மனிதர்களில் ஒருவர் நீங்கள். கடவுள் உங்களுக்கு அனைத்து சிறப்புகளையும் கொடுப்பார். ஷாலுவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த டிவிட்டர் பதிவிட்டதை கண்ட ரசிகர்கள், “தல படத்துல அட்டகாசமா நடித்து நிஜத்துல அமைதியாக success ah இருக்கார். அதான் எல்லோருக்கும் அவர புடிச்சிருக்கு but நீங்க படத்துல நடிக்குறதில்ல நிஜத்துல அடாவடியா நடிக்குறீங்க thats y நீங்க இப்படி இருக்கீங்க.” வேனாம் அங்க கடிச்சி..இங்க கடிச்சி.. தலய இடு போடவந்துட்ட.. நீயும்-தலயும் ஒன்றா ??? மனசாட்சி உனக்கு இருக்கா ?? நீ நடிகை கிடையாது அது ஒரு வரலாற்று பிழை.. அதை நினைவில் வை ! என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.




