கடந்த வாரம் நிறுத்தி வைக்கப்பட்ட கால் செண்டர் டாஸ்க்கின் இரண்டாம் கட்டம்தான் இந்த வாரமும் தொடர்ந்திருக்கிறது. இதில் இன்று முதல் கால் அனிதா மற்றும் ரியோவுக்கு இடையில்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இன்றும் கால் செண்டர் டாஸ்க்கின் இரண்டாம் கட்டம்தான் தொடர்ந்து இருக்கிறது.
நேற்று அர்ச்சனா, அஜீத், கேபி, சோம், பாலா, ஆரி என இவர்கள் டாஸ்க் முடிந்திருக்க தற்போது புரோமோவில் அனிதா மற்றும் ரியோவின் கால் ஹைலைட் ஆகியிருக்கிறது.
இதில் அனிதா ரியோவிடம், ‘நீங்கள் தனியாக கேம் விளையாடுவது போல தெரியவில்லை. வெளிய போடாத ஒரு முகமூடியை இங்கே போட்டு கொண்டு பாதி ரியோவைதான் காட்டுவேன். ஆனால் மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றால் எப்படி? அதுவும் இல்லாமல், உங்களை பற்றி யாராவது எதேனும் குறை சொல்ல வந்தால் நீங்கள் அதை கேட்பதேயில்லை. நான் சொல்றதை புரிஞ்சுக்கிட்டு பதில் சொல்லுங்க’ என அனிதா இந்த பக்கம் விடாமல் கேட்க அந்த பக்கம் ரியோ டென்ஷனாகிறார்.
வெளியே வந்து ரியோ அனிதாவிடம் ‘குட் கால்’ என சமாதானம் ஆவது போல் சொன்னாலும் அந்த பக்கம் ‘டாஸ்க் என்பதற்காக பொறுத்திருந்தேன்’ என டென்ஷனாக சொல்கிறார்.