“காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும்” என கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் காதலர் தின டுவீட் பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அன்பை பரிமாறிக்கொண்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
காதலர் தினம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.” எனத் தெரிவித்துள்ளார்.
காதலர் தினம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆண்டில் ஒருநாள் காதலை மதிப்பது மேனாட்டார் பழக்கம். வாழ்வே காதலாய் வாழ்ந்து கழிவதே நம்நாட்டார் வழக்கம். காதலொன்றில்லாத நாளுண்டா நமக்கு?” எனத் தெரிவித்துள்ளார்.