இயக்குநர் மணிரத்தினம் லைகாவுடன் இணைந்து தயாரித்து இயக்க இருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இயக்குநர் மணிரத்தினம் லைகாவுடன் இணைந்து தயாரித்து இயக்க இருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. நடிகர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இந்த கதையை எடுக்க பலர் முயன்றும் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். வெளிநாடுகளில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் எடுத்து முடித்திருக்க மீதமிருக்கும் படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்கு கொரோனா சூழல் வந்ததுவிட்டது.
விக்ரம், ஜெயம்ரவி, கார்திக், ஐஷ்வர்யா ராய் என படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. அதிக அளவிலான ஜீனியர் நடிகர் படத்திற்கு தேவைப்படுவார்கள், வெளிநாடு லொகேஷன் போக வேண்டியிருக்கும் என்பதால், படம் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் எங்கே ஷூட் நடத்துவார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
READ MORE- தனுஷ் படத்திற்கு கதை எழுதும் பாடலாசிரியர்!
இந்த நிலையில் தற்போது படத்தின் ஷூட் தொடங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது ஒரு மாதத்திற்கு ஹைதராபாத்தில் நடக்கவுள்ள படப்பிடிப்பு முடிந்ததும், முதல் பாகம் எப்போது ரிலீஸ் என்பது குறித்தான அறிவிப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கலாம்.




