இந்திய திரையுலகத்தின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இவர் தற்பொழுது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் என இந்திய திரையுலக நடிகர்களின் பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடியான ஒரு சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என்று படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ‘காவாலா’ என்ற இந்த திரைப்பாடலை கபாலி படத்தில் “நெருப்பு டா” பாடலை பாடி வைரல் ஆன பாடகர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.