தற்போது வளர்ச்சிப் பாதையில் விறுவிறுவென முன்னேறுவது ஓ.டி.டி தளங்கள்தான். ஓ.டி.டி தளங்களில் இப்போது மக்கள் அதிக அளவில் படங்கள், வெப்சீரிஸ்களைப் பார்ப்பதால் இந்தியாவில் அதிக அளவில் பார்வையாளர்களைக் கொண்டிருந்த யூடியூப்கூட சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
சென்ற மாதம் ஓ டி டி தளத்தில் வெளிவந்த படங்களான பொன்மகள் வந்தால், பென்குயின் இந்தி படமான குலாப்போ சித்தாலோ அக்சய் குமாரின் லட்சுமி பாம் போன்ற படங்கள் ஓ டி டி யில் வந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் ஓ டி டி தளத்தில் புதிய சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரிது தந்தது.
மேலும் திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் பலர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.
அந்தவகையில், விஜய் சேதுபதி, மற்றும் சரத்குமார் ஓ டி டி தளத்தில் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர். இதற்கு அடித்த படியாக ஓ டி டி தளத்தில் களம் இறங்குகிறார் கமல்ஹாசன், ஏற்கனவே இவர் விஸ்வரூபம் படத்தை டி டி எச் ல் வெளியிட முயன்றார், தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தை அடுத்து பின் வாங்கினார். இப்போது ஓ டி டி தளம் பிரபலம் அடைந்துள்ளதால் அவர் ஓ டி டி தளத்தில் களம் இறங்க உள்ளார், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் பிரான்ஸின் பிரபல நிறுவனமும் இணைந்து களம் இறங்க உள்ளன. இதனால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.