நடிகை கீர்த்தி சுரேஷ் கமலுடன் இணைந்து வேடையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்கார் படத்தை அடுத்து தெலுங்கு படங்களில் அதிகமாக கமிட்டான கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பக்கம் சென்றதோடு உடல் எடையையும் குறைத்தார். அவர் பாலிவுட் படங்கள் சிலவற்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பெண்குயின் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதோடு தலைவன் இருக்கிறான் படத்திலும் நடிக்கிறார். இந்த படங்கள் முடிந்ததும் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். ஆனால் நாயகியா அல்லது வேறு கதாபாத்திரமா என்பது குறித்து தெரியவில்லை.