நெதர்லாந்து நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான NH 800 ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்காக தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட்டு சென்றது. ஹெலிகாப்டர் விமானி உட்பட நான்கு வீரர்கள் அந்த விமானத்தில் இருந்தனர். கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளுக்கு இடையே இடையே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.இதையடுத்து ஹெலிகாப்டர் கரீபியன் கடலில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானி உட்பட இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மற்ற இரண்டு வீரர்களும் படு காயங்களுடன் தப்பினர் அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நெதர்லாந்து அரசு ராணுவம் தெரிவித்துள்ளது.