பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் திருமண சர்ச்சை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பீட்டர் பால் என்பவரை கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் வனிதா. ஆனால் அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெறாதவர் என்ற செய்தி தெரிய வர சமூக வலைதள பக்கங்கள் எல்லாம் வனிதா மீது விமர்சனத்தை அடுக்கின. அதில் சில பிரபலங்கள் அடங்குவர். அப்படி வனிதாவை சீண்டியவர் தான் நடிகை, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். படித்த பெண்ணாக இருந்து இப்படி செய்யலாமா என ட்வீட் செய்திருந்தார் லட்சுமி.

உடனே அவரை வயது வித்தியாசம் பார்க்காமல் “உன் வேலையை மட்டும் பார்” என பதி ட்வீட் செய்து கண்டித்தார் வனிதா. இந்த விஷயமும் முடிந்த பாடில்லை. பல சினிமா இணையதளங்களும் இவர்களை தனித்தனியாக பேட்டி எடுத்து வெளியிட்டு வியூஸ்களை அள்ளின. இந்நிலையில் முன்னணி சினிமா வலைதளம் ஒன்று வனிதா மற்றும் லட்சுமியை நேற்று நேரடியாக பேச வைக்க எடுக்க முயற்சி கேலிக்கூத்தாகி உள்ளது.
நிகழ்ச்சி தொடங்கியது முதல் லட்சுமியை “கிழிச்சு தொங்கவிட்ருவேன்””வாடி, போடி” என மரியாதை இல்லாமல் மிகவும் மோசமாக வசைபாடினார் வனிதா. ஒருகட்டத்தில் நிலைமை எல்லைமீறிப்போகவே லைவ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் லட்சுமி. ஆனாலும் விடாமல் திட்டித்தீர்த்தார் வனிதா.

இதனையடுத்து இந்த இண்டர்வியூ வைரலானது. பலரும் லட்சுமிக்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் அவர்களை கலாய்த்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

குடும்ப சண்டை வீதிக்கு வந்தால், நிலைமை இதுதான் போல. அடுத்து நடிகை கஸ்தூரி தயாராக இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.