பிரபல டான்ஸ் மாஸ்டராக இருந்து படிப்படியாக முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக முன்னேறியுள்ள ராகவா லாரன்ஸ் இப்போது பாலிவுட் வரை தன் கொடியை பறக்கவிட்டு கொண்டு இருக்கிறார்.
இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை பலபேர் இவருக்கு அரசியல் ஆசை இருக்கிறது என்கிற பேச்சும் அடிக்கடி சமூக வலைதளங்களில் கூறப்படும் ஒன்று தான். ஆனால் அவர் ஒருபோதும் அரசியலுக்கு வருவதாக இதுவரை வெளிப்படையாக அறிவித்தது இல்லை.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை தன் ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
“நான் அரசியலுக்கு வந்து ஒரு இடத்தைப் பிடித்து அதன் மூலமாக ஏழை மக்களுக்கு இது செய்வேன், அது செய்வேன் என வாக்கு கொடுத்து, நேரத்தை வீணடிப்பதை விட, அமைதியாகவே இருந்து இந்த சமுதாயத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முடிந்த உதவிகளை செய்வது தான் எனவும், நான் இதற்கு முன்பு வெளியிட்ட வீடியோ எனது 12 வருட உழைப்பு மற்றும் நம்பிக்கை, அவர்களது கனவு நிஜமாகி இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். இந்த குழந்தையோடு சேர்த்து 200 மற்ற குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வராமல் கூட இதை எல்லாம் செய்ய முடியும். சேவை தான் கடவுள்” என ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடன் லாரன்ஸ் நிச்சயம் இணைவார் என பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.