ராம் அருண் காஸ்ட்ரோ கதாநாயகனாக இயக்கி நடித்து உள்ள புதிய படம் தான் `ஹர்காரா’. இவர் ஏற்கனவே `வி 1 மர்டர் கேஸ்’ படத்தில் நாயகனாக நடித்து இருந்தார்.தற்போது `ஹர்காரா’ படம் மூலம் புது யுக இயககுனராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடிகர் காளி வெங்கட் வருகிறார். கவுதமி சவுத்ரி, ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படம் குறித்து ராம் அருண் காஸ்ட்ரோ கூறும்போது, “தபால் காரர்களின் சேவையை இன்றைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் படமாக தயாராகிறது. டிஜிட்டல் வசதி இல்லாத காலத்தில் ஒரு மலை கிராமத்துக்கு செல்லும் தபால்காரர் எதிர்கொள்ளும் சவால்களையும் அங்கு வாழும் மக்களையும் பின்னணியாக கொண்டு படம் இருக்கும். மலை கிராமத்தில் ஒரு தபால்காரரை குலசாமியாக வழிபடு கிறார்கள். அவர் எப்படி குலசாமியாக மாறினார் என்பதை இந்தப் படம் விளக்குகிறது என்று கூறினார் அவர். நவீன காலத்து தபால்காரராக காளி வெங்கட் வருகிறார். தேனி அருகில் உள்ள மலைப்பகுதியில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது”என்றார்.இந்த படத்தை என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ் தயாரிக்கின்றனர்.ஒளிப்பதிவு: பிலிப் ஆர்.சுந்தர், லோகேஷ் இளங் கோவன், இசை: ராம்சங்கர் என ஒரு பெரிய குழு இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.