2007ம் ஆண்டு கன்னட சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அந்த சீரியலை தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை பக்கம் வந்த இவர் தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம், செம்பருத்தி, இதுசொல்ல மறந்த கதை என தொடர்ந்து நடித்து வந்தார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையும் சரளமாக பேசக் கூடிய ஒரு நடிகை. அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரச்சிதா தனது அம்மாவை நினைத்து கதறி கதறி அழுது கடிதம் ஒன்று எழுதி அனுப்பினார். என் அம்மாவின் அருமை தெரிய ஆரம்பிக்கும்போதுதான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. இதற்கு பிறகு எனக்கு நீ, உனக்கு நான் என்று வாழ விரும்புகிறேன்.
இங்கு நான் நிற்பதற்கு முழு முதல் காரணம் என் அம்மாதான். அவரை நல்லபடியா நான் பார்த்துகொள்ள வேண்டும் என்று கண்ணீர் விட்டு உருக்கமாக பிக்பாஸ் ரச்சிதா மகாலட்சுமி பேசினார். அப்படி ரச்சிதா எமோஷ்னலாக பேசிய அவரது அம்மாவை பார்த்துள்ளீர்களா, இதோ பாருங்கள்,