இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராகுல் தேவ். இவர் தென்னிந்திய மொழிகளில் வெளிவந்த படங்களில் பெரும்பாலும் வில்லனாக மட்டுமே நடித்துள்ளார்.
தமிழில் அஜித் நடித்து வெளிவந்த வேதாளம், சூர்யா நடித்து வெளிவந்த ஆதவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் தென்னிந்திய திரையுலகம் குறித்து தவறாக பேசி, சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதில் அவர், ‘எனது மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டுதான் தென்னிந்திய படங்களில் நான் நடிக்க செல்கிறேன். ஜிம் பாடியான என்னை வலுவிழந்த ஹீரோ அடித்து உதைபதை நான் சகித்துக்கொண்டு ஆக வேண்டும்’ என பேசியுள்ளார். தற்போது இது சர்ச்சையாகி உள்ளது.