’’முத்தைய முரளிதரன் BIOPIC படம்….’’ விஜய் சேதுபதிக்கு நடிகர் சரத்குமார் ஆதரவளித்துள்ளார்.

இலங்கை தமிழரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, 800 எனும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இப்படத்திற்கான மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், இலங்கைப் போரில் சிங்கள அரசுக்கு ஆதரவாக முரளிதரன் செயல்பட்டதாகவும், அவரது படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது எனவும் அப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இதுதொடர்பாக #shameonyouvijaysethupathi என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகின.
ஆனால் பாஜக தலைவர்கள் அண்ணாமலை, குஷ்பு போன்றோர் விஜய் சேதுபதிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில், 800 படம் குறித்த சர்ச்சை தொடர்பாக, முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம் அளித்தார். அதன்படி, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரானவன் என்பது போல் என்னை சிலர் சித்தரிக்க முயல்கிறார்கள் மலையகத் தமிழனான நான் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற உதவிகளை செய்துள்ளேன் எனவும், 2002ம் ஆண்டு எல்டிடிஇ கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு சென்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், போர் முடிந்த பிறகு எனது அறக்கட்டளை மூலமாக ஈழத்தமிழ் மக்களுக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளதாகவும்,
போர் முடிவுற்றதால் தான் 2009ம் ஆண்டை என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறினேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் கூறியதை தவறாக புரிந்துகொண்டு, தமிழர்களை கொன்று குவித்த நாளை நான் மகிழ்ச்சியான நாளாக கூறியதாக அவதூறு பரப்பப்படுவதாகவும், எனது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள் என்றும் முரளிதரன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இதுகுறித்து கூறுயுள்ளதாவது: நடிகர்களை எந்தக் கதாப்பாத்திரத்தில் ஏற்று நடிப்பதற்கும் உரிமை உண்டு, அப்படி நடிக்கக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இப்படத்தில் அரசியல் இல்லை எனக் கூறிய பின்பு, விஜய் சேதுபதியை நடிக்ககூடாது என்று கூறிவதில் எந்த நியாமமுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகை ராதிகா சரத்குமாரும் விஜய் சேதுபதி படத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.




