நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.




