தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் சற்று முன்னேறியுள்ள நிலையில், எஸ்.பி.பி எழுதிய மூன்று வார்த்தைகளை கொண்ட காகிதத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், உயிர் காக்கும் கருவிகள் மற்றும் வென்டிலேட்டர் வசதியுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்காக தமிழ் திரையுலகமே பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில், மருத்துவர்களின் கடின முயற்சிக்குப் பிறகு அவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தான் நலம்பெற பிரார்த்தனை மற்றும் கடினமாக முயற்சிகளை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் என்று எல்லோருக்காகவும் இவர் மூன்று வார்த்தைகள் கொண்ட கடிதத்தை தனது கைப்பட நேற்று எழுதி இருக்கிறார் .
அதில் ”லவ் யூ ஆல்” என்று எஸ்.பி.பி எழுதி கொடுத்திருக்கிறார் . லேசான கிறுக்கல் உடல், தனது மனதை அவர் விவரித்தி காட்டி இருக்கிறார். உயிர் பிழைப்பாரா எணும் மோசமான நிலைக்கு சென்ற எஸ்.பி.பியின் உடல்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அவரது ரசிகர்களை கடந்து ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் சற்று மகிழ்ச்சி அளித்துள்ளது




