சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்திகேயன் தற்போது அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சர்க்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் “டான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான தமிழகத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் டான் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதைபோல் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ள சயின்ஸ் பிக்க்ஷன் திரைப்படமான அயலான் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்திற்கான தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில், அட்லியின் முன்னாள் உதவி இயக்குனர் அசோக் என்பவர் இயக்கத்தில் அப்பா மகன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு சிங்கப்பாதை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியானது.
இத்திரைப்படத்தையும் கே.ஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




