இந்த கொரோனா காலத்தில் மக்கள் யாரை மறந்தாலும் சோனு சூட் என்ற மாபெரும் திரைப்பட நடிகரை மறக்க மாட்டார்கள் .அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சோகமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/Sonu-Sood_Seithialai-1024x768.jpg?resize=1024%2C768&ssl=1)
திரை படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் அவர் செய்யும் உதவிகள் மக்கள் அவரை ஒரு கதாநாயகனாகவே கொண்டாடினர். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தன் சொந்த செலவில் வாகனம் ஏற்படுத்தி கொடுப்பது ஆகட்டும், ஆந்திராவில் மாடு இல்லாமல் தன் பெண் குழந்தைகளை வைத்து ஏர்பூட்டிய விவசாயிக்கு ட்ராக்ட்டர் வாங்கி தந்ததில் ஆகட்டும் மேலும் பல உதவிகள், பல பேருக்கு உணவுகள் வழங்குவதில் ஆகட்டும் சோனு சூட் ஒரு வாழும் தெய்வமாகவே திகழ்கிறார்.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/Sonu-1_Seithialai-1024x584.jpeg?resize=1024%2C584&ssl=1)
அப்படி இருக்கும் அவருக்கு ஒரு மாபெரும் சோகம் நடந்துள்ளது. நாக்பூரை பூர்விகமாகக்கொண்ட சோனு சூட் மும்பையில் தனியாக உள்ளார், நேற்று அவருடைய 47 ஆம் பிறந்தநாள் ஆகும் எப்போதும் தன் பிறந்தநாளை வெகு விமர்சையாக தன் வீட்டில் கொண்டாடுவார் ஆனால் இந்த வருடம் ஊரடங்கின் காரணமாக மும்பையில் மாட்டிக்கொண்டார்.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/Sonu-Real-Hero_Seithialai.jpg?resize=600%2C338&ssl=1)
இதனால் அவரின் பிறந்தநாளை மும்பையிலேயே கொண்டாடினார் அவருக்கு மும்பையில் நண்பர்கள் யாரும் இல்லை எனவே இரவு 12மணிக்கு நடுரோட்டில் தனியாக கொண்டாடினார். அந்த நிகழ்வை தன் முகநூலில் கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார் “சோனுசூட் “நான் என் பிறந்தநாள் அன்று மும்பை நகரில் உள்ள பாலத்தின் மேல் அமர்ந்து கொண்டு இருந்தேன் என் தந்தை, மற்றும் சகோதரி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து விட்டு கேட்டனர் உனக்கு மும்பையில் நண்பர்கள் யாரும் இல்லையா?
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/sonu-sood_Seithialai-1-1024x576.jpg?resize=1024%2C576&ssl=1)
ஆம் எனக்கு ஒரு நண்பர்கள் கூட மும்பையில் இல்லை அதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது அதை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது என குறிப்பிட்டு இருந்தார் ஏற்கனவே பாலிவுட் துறையில் ஏகப்பட்ட புகார்கள் வந்த நிலையில் சோனுசூட் இப்படி சொல்லி இருப்பது பாலிவுட் நடிகர்கள் மேல் மக்களுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.