சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விக்ரம். இவருக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம் என்று சொல்லுவார்கள். அது மட்டுமில்லாமல் பெண் ஒருவர் இவருக்கு கடிதம் எழுதுவது போன்ற வதந்தியை உருவாக்கி தொகுப்பாளர்கள் அவரை கலாய்த்துக் கொண்டும் இருப்பார்கள்.
தொலைக்காட்சியில் சுமார் 10 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சியின் 7ஆவது பகுதியில், இறுதிச்சுற்றுக்கு மூக்குத்தி முருகன், விக்ரம், புண்யா, சாம் விஷால், கவுதம் ஆகியோர் தகுதி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் மூக்குத்தி முருகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மூக்குத்தி முருகனைத் தொடர்ந்து விக்ரம் 2ஆவது இடம் பெற்றார். அவருக்கு 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக அறிவிக்கப்பட்டது.
விக்ரம் மற்றும் அவரது மனைவி உடன் சிவானி இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்ட்ராமில் சிவானி பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்து பார்த்து வருகின்றனர்.