
டொராண்டோவில் இந்தாண்டு நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (IIFFT) ‘கைதி’ படம் சிறப்பு திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது படக்குழுவினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய திரைப்படத்துறையின் சார்பில் 1952 ஆண்டு முதல் சர்வதே திரைப்பட விழா நடைபெறுகிறது. முதன் முதலில் சென்னை, மும்பை. கொல்கத்தா போன்ற நகரங்களில் நடத்தப்பட்டது. அதன்படி இந்தாண்டு ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் தேர்வாகியுள்ளது.
கைதியின் வாழ்க்கை சூழலை நேர்த்தியாக வெளிக்கொணர்ந்த திரைப்படங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான கைதி திரைப்படமும் ஒன்று. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ரூ.100 கோடி வசூல் சாதனை பெற்றது. இதனையடுத்து டொராண்டோவில் இந்தாண்டு நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (IIFFT) ‘கைதி’ படம் சிறப்பு திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு உழைத்த அனைத்து படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவிப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டாம் பாகம் விரைவில் தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தகது.
திருவிழாவில் திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற படங்களில், தெலுங்கு விளையாட்டு-நாடகம் ‘ஜெர்சி’, இந்தி படம் ‘சூப்பர் 30′ மற்றும் மலையாள திரைப்படம் ‘டிரான்ஸ்’ ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.