சிம்புவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க கெளதம் மேனன் பெயர் அடிபடுகிறதாம்.
‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’ படங்களுக்கு பிறகு நடிகர் சிம்பு ‘பத்துதல’ படத்தில் க்ருஷ்ணா இயக்கத்தில் நடிக்கிறார்.
இதில் பிரியாபவானி சங்கர், கெளதம் கார்த்திக், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் கெளதம் மேனனை படக்குழு அணுகியுள்ளதாம். இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.
கெளதம் மற்றும் சிம்பு ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE- சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டாக்டர்’ ஹீரோயின்! #Suriya40
மேலும் நேற்று வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சிம்பு மற்றும் கெளதம் மேனன் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா2’வாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.