விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இதில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார், அதேபோல் துணிவு திரைப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த போனி கபூர் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் (ரெட் ஜெயண்ட் மூவீஸ்) உதயநிதி ஸ்டாலினும், வாரிசு திரைப்படத்தை (செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ) லலித் குமாரும் வெளியிடுகின்றனர். தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஆற்காடு உள்ளிட்ட 4 இடங்களில் வாரிசு திரைப்படத்தை வெளியிடும் உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் துணிவு – வாரிசு திரைப்படத்திற்கு சம திரையரங்குகள் ஒதுக்கப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளளார். மேலும் நடிகர்களை விட கதைதான் படத்தின் வெற்றியை உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.